பரதநாட்டியத்தில் உள்ள முத்திரைகளை 30 விநாடிகளில் செய்து சாதனை

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி,சம்யுக்தா பரதநாட்டியத்தில் உள்ள 54 முத்திரைகளையும் முப்பது விநாடிகளில் அபிநயம்  செய்த படி சொல்லி  நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை கணபதியை சேர்ந்தவர் சம்யுக்தா.பத்தாம் வகுப்பு மாணவியான இவர்,சிறு வயது முதலே சாய் கலாஷேத்ரா நாட்டிய பள்ளியில்  பரதநாட்டியம் கற்று வருகிறார். இந்நிலையில் நாட்டியம் கற்பதற்கு  முக்கிய கலையான 54 முத்திரைகளை முப்பது விநாடிகளில் அபிநயம் செய்தபடி சொல்லி நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதற்கான நிகழ்ச்சியில் அவரது குரு சீதாலட்சுமி,மற்றும் பெற்றோர்கள் ரமேஷ் பாபு,சந்திரபிரபா ஆகியோர் முன்னிலையில் 54 முத்திரைகளை அபிநயம் செய்து சாதனை படைத்தார். பத்தாக்கம்,மயூரம்,கத்திரி முகம் போன்ற ஒரு கைகளால் செய்யும் 28 முத்திரகளையும்,அஞ்சலி,கற்கடகம்,தபோத்தம் போன்ற இரு கைகளால் செய்யும் 26 முத்திரைகள் என 54 முத்திரகளையும் குறைந்த நேரத்தில் செய்த இவரது சாதனையை பாராட்டி நோபள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

ஏற்கனவே ஒரு நிமிடத்தில் செய்த இந்த சாதனையை மாணவி சம்யுக்தா முப்பது விநாடிகளில் செய்து முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.