கொரோனா கட்டுப்பாடுகளை  மீறியவர்களிடம் ரூ.90 ஆயிரம் வசூல்

கோவையில் உள்ள பல  பகுதிகளில் அரசு விதித்த கொரோனா  கட்டுப்பாடுகளை  மீறியவர்களுக்கு  நேற்று (03.05.2021) ஒரே  நாளில் ரூ.90 ஆயிரத்து 650 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா விதிமீறல் தொடா்பாக அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு  மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி  நேற்று மேற்கொண்ட ஆய்வில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்த 100 பேரிடம் ரூ.20 ஆயிரமும், கொரோனா விதிமுறை மீறயதாக 332 வா்த்தக நிறுவனங்களுக்கு ரூ.70 ஆயிரத்து 650 அபராதமும் விதிக்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா விதிமுறைகளை மீறிய  பொது மக்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 90 ஆயிரத்து 650 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.