கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினர் சாலை மறியல்

பாப்பநாயக்கன்பாளையத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் (04.05.2021)ஈடுபட்டனர்.

பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் வீதியிலுள்ள ஒருவரின் வீட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சியினர்,  அப்பகுதி முழுவதும் தகர சீட்டு அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த வீதியிலுள்ள 15-க்கும் மேற்பட்ட வீட்டினர் தீடிரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: ஒரு வீட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு உள்ள காரணத்தினால்  வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளவதாக கூறினர்.