தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,616-க்கு விற்பனை

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 240  உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 உயர்ந்து. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,4528க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,616க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10  காசுகள் குறைந்து  ரூ.73.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.35,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.4,432- க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.