ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆசிரியர் செறிவூட்டல் சங்கம் சார்பாக புதுமையான கல்வி கற்பித்தல்” (INNOVATIVE PEDAGOGIC DISCOURSE) எனும் தலைப்பில் ஐந்து நாள் பயிற்சி  நடைபெற்றது.

நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக  ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளைக் கொண்டுஅனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முதன்மையர்களைக் கொண்டு இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

முதல் நாளன்று,  ராஜா (Assistant Control of Patents and Design, Patent office Chennai )அறிவுசார் சொத்துரிமை குறித்தான செய்திகளை “Intellectual Property Rights in Academia’” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும், இரண்டாம்  நாளில்   கோவை அரசு கலைக் கல்லூரி, உளவியல்துறைஇணைப் பேராசிரியர் செல்வராஜ்  கல்லூரி மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் சம காலத் தேவை என்பது குறித்தான செய்திகளை தக்க சான்றுகளுடன் பேராசிரியர்களுக்கு விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து 28.4.2021 அன்று ஆன்மிக சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் சுப்ரமணியன் ஆசிரியர் பணியின் மாண்புஎனும் தலைப்பில் ஆசிரியர்களுக்குரிய தனித்தன்மை, பண்புகள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதனை  எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து 29.4.2021 அன்று சரளமையம் (Fluency centre) உரிமையாளர் மங்கள பிரதாபன் Multimodal Composition of our Curricula and Pedagogy எனும் தலைப்பில் சரளமாகப் பேசும் மொழித்திறன் வளர்ச்சிக்கான வழிமுறைகள், வாசித்தல் பயிற்சியின் முக்கியத்துவம், பயிற்சிக்கான புத்தக வகைகள் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் அதற்கான வழிமுறைகள், வகைப்பாடுகள் குறித்து கூறினார்.

இணைய வழி தொடர் நிகழ்விற்கு உதவிப்பேராசிரியர், தலைவர் வனிதா மேலாண்மைத்துறை ஒருங்கிணைந்து வழங்கினார்.

இந்நிகழ்வில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.