சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு சீமா தலைவர் வாழ்த்து

தமிழக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  ஸ்டாலினுக்கு தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) சார்பாக அதன் தலைவர் கார்த்திக் வாழ்த்துக்களை தெரிவித்து  உள்ளார்.

 பத்திரிக்கை செய்தியின் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர் கூறியதாவது: ஸ்டாலினின் தலைமைப்பண்பு மற்றும் அவரின் அனுபவம், மூலம் தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதாரம் நன்கு வளர்ச்சிபெறும் எனவும், தமிழகத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக சிறப்பான வெற்றிகரமான ஆண்டுகளாக அமைய சீமாவின் சார்பாக வாழ்த்துகிறோம் என்றும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு  ஸ்டாலின்  தலைமையில், தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் சீமா தனது ஒத்துழைப்பினை நல்கும் என அவர் தெரிவித்துள்ளார்.