கோவையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

கோவை அரசு கலை கல்லூரியில், கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தால் சுகாதாரத் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவியுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசால் பரிந்துரை செய்ய பட்ட தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள  பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில்,  தடுப்பூசிகள்  செலுத்தபட்டால்,  கூட்டம் அதிக அளவில் வரக்கூடும் என்று, தற்காலிமாக அரசு மருத்துவமனையில் செலுத்த படுகின்ற, தடுப்பூசிகளை, அரசு கலைக்கல்லூரியில், வைத்து பொதுமக்களுக்கு செலுத்தபட்டு வருகின்றது.இங்கு தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் குவிந்து வருகின்றனர்.

மருந்துகள் பற்றாகுறை காராணமாக, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே  வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வருகின்ற பொதுமக்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர், ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்: தினமும் ஆயிரக்கணக்கானோர், தடுப்பூசி செலுத்தி கொள்ள இங்கு வருகின்றனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து மருந்துகள் அத்தனை பொதுமக்களுக்கும் கிடைப்பதில்லை அதனால், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு புரிய வைத்து மீண்டும் நாளை வந்து பார்க்கும் படி அறிவுரை  கூறி அனுப்பி வருகிறோம். என்றனர்.