முடிவளர என்ன செய்யலாம் ?

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை கூந்தல் உதிர்வு. உணவு முறைகள், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் மாசு, மனஅழுத்தம், மற்றும் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. நம் அழகை வெளிக்கொணர்வதில் முடி முக்கிய அம்சத்தினை பெறுகிறது. முடி வளர்வதற்கு போதுமான ஊட்டசத்துக்கள் நம் உடலில் குறைவாக இருப்பதனால் தான் முடி உதிர்தல் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.வெளிப்புறத்தில் பலமுறைகளை கையாளுவதைவிட உள்ளே எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலம் முடிஉ திர்வதை தடுத்து, சுலபமாக வளர செய்யலாம்.

கறிவேப்பிலை :

நமது உச்சந்தலையை ஆரோக்கியமாக பாதுகாத்து இளைமையாக வைத்து இருக்க உதவுகிறது. முடியின் வேர்கால்களுக்கு வலுவூட்டி, முடி மெலிந்து செல்வதை தடுத்து, முடி உதிர்வை குறைக்கிறது. முடியை அடர்தியாகவும், கருமையாகவும் மற்றும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

பாலக்கீரை, முருங்கைகீரை:

பொதுவாக கீரைகளை விரும்பி உண்போர் குறைவு. ஆனால் கீரைகளில் முடிவளர போதுமான அளவு நற்சத்துக்கள் உள்ளன. அடர்த்தியான முடிவளர பாலக்கீரையை எடுத்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் E,B,C மற்றும் ஒமேகா 3 உள்ளது. இந்தக் கீரைகளில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால், ரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனை தலைக்கு கொண்டு சேர்க்கும். இச்செயலினால் முடி நன்றாக வளரும்.மேலும் முருங்கை இலையில் உள்ள துத்தநாகம் முடியின் வளர்ச்சியை ஊக்குவித்து சேதமடைந்த வேர்க்கால்களை விரைவில் மீட்கிறது .

வெந்தயம் :      

வெந்தயம்  தலை முடிக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.வெந்தயத்தில் உள்ள ப்ரோடீன் முடி உதிர்வை கட்டுப்படுத்தி, தலை முடியை அடர்த்தியாக வளர செய்கிறது. இதன் மூலம் முடி பாதியிலேயே உடைவதை தடுக்க முடியும் .

நெல்லிக்காய் :

மலை நெல்லிக்கனி எனப்படும் பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதால் தலையில் ஏற்படும் அரிப்புகளை கட்டுப்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது .