இது முடிவல்ல, ஆரம்பம் ! – மகேந்திரன், துணைத் தலைவர், மக்கள் நீதி மய்யம்.

மக்கள் நீதி மய்யம்  துணைத் தலைவர் மகேந்திரன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 36,855 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். தேர்தல் முடிவு வெளியிட்ட பின்னர், சமூக வலைதளம் வாயிலாக மக்களுக்கு தன் நன்றிகளை தெரிவித்த அவர்  “மக்கள் வழங்கி இருக்கும் தேர்தல் முடிவுகளை முழு மனதாக ஏற்றுக்கொள்கிறேன்!” என்று கூறினார்.

அதே தருணம் தான் தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன் எனவும் பதிவிட்டார் “இது முடிவல்ல ஆரம்பம்! முழுமையான மக்கள் ஆதரவை பெறவும், மக்கள் வாழ்வு உயரவும் உழைத்துக்கொண்டே இருப்பேன்!”

கோவை தெற்கு தொகுதியில் கமல் அவர்கள் 51087 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கும் பா.ஜ.க வேட்பாளருமான வானதி சீனிவாசனுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு  வித்தியாசத்தில் வானதி வெற்றி பெற்றார்.  மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் தேர்தல் முடிவை பற்றி அவர் பேசுகையில் :

“ஓட்டுக்கு காசு கொடுக்காமல், முதல் தேர்தலிலேயே அதிக பட்ச வாக்குகள் பெற்று, வெற்றிக்கு மிக அருகில் சென்றிருக்கும் நம்மவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!”

“நம்மவருக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டும், நேர்மையான ஓட்டு! வாய்மைக்கு கிடைத்த ஓட்டு! வாக்களித்த நேர்மையாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்,” எனவும் பதிவிட்டார்.