சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற ‘கூழாங்கல்’

இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தினை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்தில் நயன்தாராவும் பங்குதாரராக இருக்கிறார். இதன்மூலம் கூழாங்கல் திரைப்படத்திற்கு நயன்தாராவும் தயாரிப்பாளர் ஆகிறார்.

மேலும் குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவை எடுத்துச் சொல்லும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் நெதர்லாந்தில் சர்வதேச திரைப்பட விழா போட்டியில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. இதேபோல் நியூயார்க்கிலும் கூழாங்கல் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.