இந்தியா வந்தடைந்த  ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்

ரஷ்யா தயாரிப்பான  ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தன.முதற்கட்டமாக 1.50 இலட்சம் தடுப்பூசிகள் ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து.

சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷில்ட் மற்றும் பாரத் பயோ  டெக்கின் கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த இரு தடுப்பு மருந்துகளும் மாநிலங்களில் தட்டுப்பாடாகி வருகிறது. கொரோனா தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் தடுப்பூசியினால் தொற்றின் தீவிரத்தை குறைக்க முடியும் என மருத்துவ வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி செயல் திறம் மிக்கது என ஆய்வு முடிகள் தெரிவித்த நிலையில் இந்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அவசர கால பயன்பாட்டிற்கு இம்மருந்தை உபயோகிக்க அனுமதியளித்தது.

மே மாத தொடக்கத்தில் மக்களுக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாதம் 2 இலட்சம் தடுப்பூசிகளும், அடுத்த மாதம் 50 இலட்சம் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன .