தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம், அடுத்த அலைகள் காத்திருக்கிறது

இத்தகைய அச்சங்களுக்கு நடுவில் சிக்கியுள்ள இந்தியா, இரண்டாவது அலைகளில் மூழ்கியுள்ளது, இது வரும் வாரங்களில் மோசமாகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, புனே மற்றும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல நகரங்கள் 3 மற்றும் 4 வது கட்டங்களில் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடும் இந்த நிலையை சந்திக்கும்.

முதல் அலை என்பது உள்ளூர் பரவல் இல்லாமல் தனிப்பட்ட தொற்றுநோய்களின் முதல் கட்டமாகும், இது உள்ளூர் பரிமாற்றத்துடன் தொடங்கும் இரண்டாம் நிலைக்கு நகர்கிறது, அதன்பிறகு மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலையில் இதனை எளிதில் கண்டறிய முடியாது. அப்படியென்றால் இது அதீத விளைவை கொடுக்க கூடியதாக மாறிவிடும்.  தற்போது, ​​அந்த நிலையை எட்டிய ஒரே நாடு சீனா மட்டுமே. ஐரோப்பா அதன் மூன்றாம் கட்டத்தில் உள்ளது.

“கொரோனா வைரஸின் தொடர்ச்சியான உருமாற்றம் கவலைக்குரியது, ஏனென்றால் தொற்றுநோய் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது மெதுவாக இருக்கும் என்பதைக் கணிப்பது எளிதல்ல,” என்று கவலைப்படுகிறார் தொற்று நோய் நிபுணரும் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சியின் ஆலோசகருமான டாக்டர் ஓம் ஸ்ரீவாஸ்தவ் மையம், மும்பை.

உலக நாடுகளில் ஐரோப்பா தவிர்த்து பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாண்ட், போலாண்ட், கனடா போன்ற நாடுகள் தற்பொழுது மூன்றாம் அலையை சந்தித்து வருகிறது. சில மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்.

மேலும் இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி, ஊரடங்கு ஆகியவைகளால் தான் முடியும் என்றும் தடுப்பூசியை தவிர்த்தால் மூன்றாம் மற்றும் நான்காம் அலையின் போது பெரும்பான்மையான இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்பொழுதே இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒருநாளைக்கு 4 லட்சம் என்ற வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது அலைக்கே தள்ளாடும் நம் நாடு தடுப்பூசியையும் ஊரடங்கையும் அமல்படுத்த விட்டால் மூன்றாம் அலை மற்றும் நான்காம் அலை இதையும் மிக எளிதில் கடந்து சென்று விடும்.

தற்பொழுது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிகிச்சைக்கு காத்திருப்போரின் வரிசை மருத்துவமனை வளாகத்தையும் தாண்டி நிற்கிறது. தொற்றின் தீவிரம் காரணமாக ஆக்சிஜன் பற்றாகுறையாலும் பல மாநிலங்கள் திணறி வருகிறது. இரண்டாம் அலை எப்பொழுது உச்சம் பெற்று குறையும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நோயை தடுக்கும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு, கொரோனாவின் தீவிரம் என இந்தியர்கள் பயத்தில் முகம் வெளிர்த்து காணப்படுகின்றனர்.

தடுப்பூசி குறித்த ஒரு சில எதிர்மறை தகவல்கள் வந்தாலும் அது நிரூபிக்கப்படவில்லை. அதனால் அச்சம் வேண்டாம். தடுப்பூசியும், முகக்கவசமும், சமூக இடைவெளியும் இல்லை என்றால் இந்தியா அடுத்தடுத்த அலையில் சிக்கி மூச்சு திணற அதிக வாய்ப்புகள் உள்ளது. முடிந்த வரை அநாவசிய பயணத்தை  தவிர்ப்போம்.