காற்றின் மூலம் அதிகம் பரவுகிறதா கொரோனா?

கொரோனாவின் முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தொடங்கியும் கொரோனா நோய்த் தொற்று பரவுவதை குறித்து இன்னும் விஞ்ஞானிகள் உறுதியாக சொல்ல வில்லை.

அண்மையில் மருத்துவ ஆய்விதழான, ‘தி லான்செட் கொரோனா தொற்று காற்றின் மூலமும் அதிகமாக பரவுகிறது என்பதற்கு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. தற்போது, தும்மல் அல்லது இருமல் மூலம் சிதறும் நீர்த்திவலைகள், எதிராளியின் சுவாசத்தில் புகுந்து கொரோனா நோய் ஏற்படுவதாகவே பலரும் நம்புகின்றனர். நீர்த்திவலைகள் கனமானவை என்பதால் அதிக தூரம் அவை பயணிப்பதில்லை. சிக்கிரமே புவியீர்ப்புக்கு ஆளாகி அவை தரையில் விழுந்துவிடும். மாறாக, நுண்துளிகள் வழியே, காற்றில் கலக்கும் கொரோனா  கிருமிகள் அதிக தூரம் பயணித்து, தொற்றை ஏற்படுத்துகின்றன என ‘தி லான் செட்’ கட்டுரை விளக்குகிறது. தற்போது கொரோனாவின் வீரியம் அதிகரித்து மிக வேகமாக பரவி வருகிறது இந்நேரத்தில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே இந்த பரவலை தடுக்க முடியும்.