5 கே கார்  கேர்: நோபள் புக் ஆப் சாதனை

5 கே கார் நிறுவனம் குறுகிய கால நேரத்தில் ஒரு இலட்சம் கார்களை சுத்திகரிப்பு செய்து நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் நூறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் 5 கே கார் கேர் சேவை நிறுவனத்தின் சாதனை விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை,மதுரை,திருச்சி,கரூர்,தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளைகளின் சாதனைகள் குறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் சின்னராஜ் கேட்டறிந்து கிளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு தமது பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து  கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் குறுகிய கால நேரத்தில் ஒரு இலட்சம் கார்களை சுத்திகரிப்பு செய்த சேவை சாதனையை ஊக்குவிக்கும் விதமாக  5 கே கார் நிறுவனத்திற்கு நோபள் புக் ஆப் சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் சின்னராஜிற்கு  நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு வழங்கி கவுரவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய,கார்த்திக் குமார்,கடந்த மாதம் மட்டும் 37 கிளைகளை துவங்கியதாகவும் ,இதன் வாயிலாக சுமார் 500 இளைஞர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,இந்த சாதனைகளை செய்ய தம்முடன் பயணித்து கொண்டிருக்கும்,தமது கிளை நிர்வாகிகள், மேலாளர்கள்,ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.