கொரோனா விழிப்புணர்வு குறித்து இணையதள நிகழ்வு 

பாரதியார் பல்கலைகழக  நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு குறித்த இணையதள நிகழ்வு  இன்று (30.4.2021) நடைபெற்றது.

பதிவாளர்  முனைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் காளிராஜ் துவக்கி வைத்தார்.இதில் மருத்துவர் பக்தவத்சலம் கலந்து கொண்டு கோவிட் பாதுகாப்பு குறித்து பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் டாக்டர் காளிராஜ்,கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் இது குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு,நாட்டு நல பணி திட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச கப சுர நீர்,மூலிகை முக கவசங்கள் வழங்கி,சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறுவதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை பொறுத்த வரை முது நிலை கலை பிரிவு மாணவர்களுக்கு இணையவழியாகவே வகுப்புகள் நடத்துவதாக கூறிய அவர்,அறிவியல் மற்றும் சில பிரிவுகளுக்கு மட்டும் செய்முறை வகுப்புகளை விரைந்து  நடத்துவதாக தெரிவித்தார்.