கிராப்  தியரி குறித்த இணைய வழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில் ”APPLICATION OF GRAPH THEORY IN COMPUTING SCIENCE” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் (29.4.2021) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் நாகர்கோயில் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் வெர்னால்டு விவின் கலந்து கொண்டு, கிராப் (வரைபடம்) தியரி அறிமுகத்தையும், அதன் வகைகளையும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

பின்பு, கிராப்தியரி கணினி பயன்பாடுகளைப் பற்றியும், மேலும் Signal Processing, Aircraft and Network வலைப்பின்னலில் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றிக் கூறி,கோனிகஸ் பர்க் கிராப் மற்றும் அதன் வழிகளையும் குறித்து விளக்கினார்.

கிராப் தியரி கணினி பயன்பாடு குறித்த இக்கருத்தரங்கில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.