தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 69வது குடியரசுத் தினவிழா

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று (26.01.18) 69வது குடியரசுத் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு.ராமசாமி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய இணையதள முகவரியை துவக்கி வைத்தார். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.