நிலக்கடலை : தெரிந்த வதந்திகளும், தெரியாத ஆச்சிரியங்களும்

நிலக்கடலை என்றாலே அது கொழுப்பு, பித்தம் மற்றும் இதய நோய்களை உருவாக்கும் என்ற தவறான புரிதல் பலரிடம் உள்ளது. நிலக்கடையில் அதிக அளவு கொழுப்புசத்து உள்ளது. ஆனால் அது நல்ல கொழுப்பே. அளவுக்கு அதிகமாக எதை உண்டாலும் அது ஆபத்தே.

  • நிலக்கடலையை அதிக அளவு உண்ணாமல் ஒருகைப்பிடி அளவு, அல்லது 10 கிராம், 30 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம். இதனை பச்சையாக ஊறவைத்து அல்லது முளைக்கட்டி சாப்பிடுவது சிறந்தமுறை. ஊறவைத்து உண்பதனால் இதில் உள்ள பித்தம் நீங்கிவிடும்.
  • நிலக்கடலையில் நார்ச்சத்து, புரதச்சத்து, மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்து உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் கர்பிணிகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
  • கடலைஎண்ணெய்யை பயன்படுத்துவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது முற்றிலும் தவறு.விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எண்ணெய் விளம்பரங்களின் ஈர்ப்பினால்,   அனைத்து சத்துக்களும் உறிஞ்சி எடுக்கப்பட்ட தெளிந்த எண்ணெய்யை பயன்படுத்துகிறோம்.   மேலும் கடலை எண்ணெய்யில் லிப்பீடுகள் இருப்பதால் அதிக்கப்படியான கெட்டக்கொழுப்பை கரைத்து நல்லக் கொழுப்பை தரக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • நிலக்கடலை நியாபகசக்தி மற்றும் இரத்த ஓட்டத்தை சீரக்க உதவுகிறது. மேலும், இதில் மூளையின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் நியாசின் உள்ளது. 30 கிராம் என்ற அளவில் இதனை சாப்பிடும் போது பித்தப்பைக் கற்கள் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • வைட்டமின் E மற்றும்  B   உள்ளதால் சரும ஆரோகியத்தை மேம்படுத்துகிறது. சரும செல்களை தனது ஈரப்பதத்தை இழக்காமல் சருமத்தை பொலிவு பெற செய்கிறது. துத்தநாகம் மற்றும் தாமிரச்சத்து உள்ளதால் தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைத்து, நன்மை செய்யக்கூடிய கொழுப்பை அதிகரிக்கிறது.
  • பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து முறையான அளவில் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை சீராக செயல்பட உதவுவதனுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. கசப்பு சுவை கொண்ட வேர்க் கடலைகளை உண்ணக்கூடாது. இதுவயிற்றின் ஜீரணத்தை பாதிக்கக் கூடியது.
  • வைட்டமின் C   நிலக்கடலையில் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது.  கூந்தலின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி முடி வளர உதவுகிறது. நிலக்கடலை உடல் எடையை அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. ஒருகைப்பிடி அளவு நிலக்கடலையை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.
  • புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும் பீட்டா சீட்டோஸ்டிரால் என்ற ரசாயனம் நிலக்கடலையில் இருப்பதால் புற்று நோய் வருவதை 58 % வரை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

பல நன்மைகள் தரக்கூடிய நிலக்கடலையை கைப்பிடி அளவு உண்டு நன்மைகளை பெறுவோம்.