ராம் இயக்கத்தில்  நிவின் பாலி

இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள திரைப்பட நடிகர்   நிவின் பாலி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நிவின், ‘ நேரம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழில் அவர் நடித்த ‘ரிச்சி’ என்ற திரைப்படம் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. கடந்த சில வருடங்களாக தமிழில் என்ட்ரி கொடுக்காத நிவின் தற்போது  ரீ – என்ட்ரி  கொடுக்கவுள்ளார்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, சவரக்கத்தி,பேரன்பு போன்ற சிறந்த கதைக்கரு கொண்ட  படங்களை இயக்கிய ராம் தற்போது நிவின் பாலியை  வைத்து, தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும்  இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ராமின் ‘தங்கமீன்கள்’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.