கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக (27.04.2021) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட போலீஸ் கந்தசாமி சாலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட ஆணையாளர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர், உப்பிலிபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பார்வையிட்டார். ஒண்டிப்புதூர் செந்தில் ஜனதா நகர் மற்றும் கண்ணன் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் . ஒண்டிபுதூர் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டதற்காக அக்கடையை மூட உத்தரவிட்டார்.

மேலும், அரசு நடவடிக்கைகளின்படி மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் நபர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்ட நெறிசல்களை தவிர்க்க வேண்டும். அரசின் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நோய் தடுப்பு  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழந்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளார் முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.