ஓடிடி பக்கம் தலை திருப்பும் பெரிய படங்கள்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை தியேட்டர்களை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக மீண்டும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த ஊரடங்கு சமயத்தில் சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. நிதி நெருக்கடி காரணமாக சினிமா தயாரிப்பாளர்கள் ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார், திரிஷாவின் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.