இந்துஸ்தான் கல்லூரியில் UNIFEST – 2018

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், மாநில அளவிலான தொழில்நுட்ப சந்திப்பு கல்லூரியின் கணினி துறை சார்பாக UNIFEST 2018 என்ற தலைப்பில் இன்று (24.01.2018) நடைபெற்றது. இதில், தொழில்நுட்ப சந்திப்பு வணிக நுண்ணறிவு மற்றும் வலைய வரைபடம் (WEB DESIGNING)  குறித்து மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரியா சதீஸ்பிரபு, கல்லூரி முதல்வர் சின்னதுரை, கணினி துறைகளின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட 35 கல்லூரிகளிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மற்றும் எழுத்தாளருமான ஏ.ராஜ்மோகன் பேசுகையில்: மாணவர்களாகிய நீங்கள் இணையதளத்தில் ஒரு மணிநேரம் மட்டும் செலவிட்டால் உங்களுடைய தகுதிக்கான வேலை நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய துறையில் உங்கள் தகுதி என்ன என்பதை ஒவ்வொரு கனமும் நினைத்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய துறை ரீதியான புதிய தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் உலகின் முதுகெலும்பாக வலைய வரைபடம் (Web – Designing) உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளும், ஆய்வுக் கட்டுரைகளும் அட்வான்ஸ் டெக்னாலஜியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், மாணவ மாணவியர்களிடையே கணினி துறை சார்ந்த வளர்ச்சியும், வெப் டிசைனிங், வெரைட்டி எண்டர்டைன்மென்ட் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.