இந்துஸ்தான் கல்வி நிறுவனம் மலேசியா சன்வே கல்லூரி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோலாம்பூர்  மலேசியாவில் உள்ள சன்வே கல்லூரி, கோவை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களுடன் கல்வி சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று (23.4.2021) செய்து கொண்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் பி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ  மாணவர்கள் சன்வே கல்லூரிக்கு சென்று ஒரு மாதம் தங்கியிருந்து அக்கல்லூரியின்  பேராசிரியர்கள் இம்மாணவர்க்ளுக்கு பயிற்றுவிப்பார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு கல்லூரியின் பேராசிரியர்களும் இவ்விரு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். மேலும் இந்துஸ்தான் இன்ஸ்டியூடில்  பயிலும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கல்லூரியிலும், மூன்றாம் ஆண்டு கோலாம்பூர்  மலேசியாவில் உள்ள சன்வே கல்லூரியில் தனது படிப்பினை தொடர்வார்கள்.

மேலும் இம்மாணவர்களின் டிகிரி சான்றிதழ்களை சன்வே கல்லூரியும், ஆஸ்திரேலியாவின்  விக்டோரியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதிஷ் பிரபு, முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன், கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோபேர் கலந்து கொண்டனர்.