கே.பி.ஆர்  கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின்  கணிணி அறிவியல் துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி இணைய வழியில்  புதன்கிழமை (21.04.2021) நடைபெற்றது.

நிகழ்வின் தலைமை உரையினை, கல்லூரி முதல்வர்  பாலுசாமி  வழங்கினார்.   விழாவின் சிறப்பு விருந்தினராக, (Business Development, International Skill Development Corporation, Regional Manager) கெல்வின் ஃப்ரெடி பால், கலந்து கொண்டு பேசுகையில்: இன்றைய சூழலில் மாணவர்கள், கணினி வாயிலாக இணைய வழியில்தான் அனைத்தையும் நிகழ்த்தமுடியும் என்று  கூறினார்.

சாதிக்க நினைப்பதை  இணையத்தின் துணைகொண்டு சாதிப்பது மிகவும் எளிது, தரவுகளைச் சேகரித்து அதை முறைப்படுத்தித் தொடக்கம் முதலே தரவுப் பகுப்பாய்வு செய்து முறையாக வகைப்படுத்த வேண்டும் என்றும், இன்றைய கணிப்பொறி உலகில் தரவுகளை எப்படி வெற்றியாக மாற்றி கையாள்வது என்றும், இன்றைய மாணவர்கள் தரவுகளின் மூலமாகதான் வெற்றியை அடைய முடியும் என்பதையும்  தமது உரையில் பதிவு செய்தார்.

மேலும் பயிற்சியும், தரவுகளை சேகரிப்பது, வடிவமைப்பது, தரவுகளின் மூலம் செயல்பாடுகளை நிறைவு செய்வது எப்படியென்றும் தரவுகளின் முக்கியத்துவம் குறித்தும் தொழில்நுட்பப் பயிற்சிகளை  அளித்தார்.

இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.