NNRC ஓய்வு பெற்றோர் சமுதாய கூடம் இரண்டு விருதுகள் பெற்று சாதனை

கோவை சிறுவாணி அருகே அமைந்துள்ள என்.என்.ஆர்.சி ஓய்வு பெற்றோர் சமுதாய கூடம், இந்திய சாதனை மற்றும் தமிழன் சாதனை புத்தகத்தில்  இடம் பிடித்துள்ளது.

கோவையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் சிறுவாணி  அருகே தீத்திபாளையத்தில் உள்ள மேற்கு மலை தொடர்ச்சி  அடிவாரத்தில் NNRC ஓய்வாளர் சமுதாய வளாகம் அமைந்துள்ளது. மனதிற்கும்,உடலுக்கும் அமைதி தரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டுகள், ஆன்மிக நிகழ்வுகள் நடக்கின்றன.

ஓய்வு பெற்றவர் சமுதாய திட்டத்தின் தலைவராக செயல்பட்டு வரும் தினகர் பெருமாள் இதுகுறித்து  கூறுகையில்:  அழகான, அருமையான மாபெரும் ஓய்வு கூடத்தை அமைத்து, இந்திய சாதனை மற்றும் தமிழன் சாதனை புத்ததகத்திலும் இந்த நீண்ட ஓய்வுக்கூடம் இடம் பிடித்துள்ளது எனவும், இந்த சாதனை புத்தகத்தில் இடம் பெற தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பின்னர், தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவித்தார்.

நீண்ட பெரிய அளவிலான இந்த ஓய்வுக்கூடத்தில் மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து திசைகளிலிருந்தும் இயற்கையான காற்றோட்டம், இயற்கையான சூரிய ஒளி  கிடைக்கும் வகையில் இதன் மத்தியில் திறந்த வெளியும் அமைக்கப்பட்டுள்ளது. தியானம், யோகா, இசை, கலை, விளையாட்டு, பிரசாரம் போன்றவைகளை நடத்தவும் வசதிகள் உள்ளன.

சூரிய ஒளியை போன்று கிருமிநாசினி எதுவும் இல்லை. இயற்கையான சூரிய ஒளியை பெறும் வகையில் மேற்கூரை ஒளி ஊடுருவும் வகையிலான பொருளால் அமைக்கப்பட்டுள்ளது. எல்ல இடங்களிலும் காற்றோட்டமும், சூரிய ஒளியும்  கிடைக்கும் வகையில் அ்மைத்துள்ளோம். திறந்த வெளி வெளிச்சம் பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. அதை இங்கு அமல்படுத்தியுள்ளோம்.   என்றார்.