OTT – யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்”

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அரசியல் கதைக்களத்துடன் அமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திரையரங்குகள் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறியுறுத்திள்ளது. மேலும் இரவு  நேர ஊரடங்கினால் இரவு காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஞாயிற்றுக்  கிழமைகளில் திரையரங்குகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் ஆனால் அன்று முழு ஊரடங்கு என்பதால் நஷ்டம் ஏற்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கவனம் ஓடிடி பக்கம் திரும்பியுள்ளது. இந்த சூழலில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து  திரைப்பட குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.