வண்ணத்தைப் பார்க்காத கண்கள்

இந்த உலகம் முழுவதும் இயற்கையாகவே வண்ணமயத்தால் நிறைந்துள்ளது.  நாம் நிறங்களின் பெயர்களை அறியும் முன்னே பல விதமான வண்ணங்கள் இவ்வுலகில் உள்ளன. வண்ணங்கள் நிறைந்த ஒன்று எப்போதுமே நம் கண்களைக் கவரக் கூடியது. இயல்பாகவே நாம் வண்ணங்களால் ஈர்க்கப்படுகின்றோம்.

நாம் வாங்கும் பொருட்களிலும், உணவுகளிலும், வீட்டிற்கு வண்ணம் பூசும்போதோ பிடித்த வண்ணங்களை கவனமாக தேர்வு செய்கிறோம்.

இயற்கையிலேயே பார்வை இல்லாதவர்களால் எதையும் காணமுடியாது. ஆனால் சிலரால் பார்வை இருந்தும் சில குறிப்பிட்ட நிறங்களை மட்டும் காண முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகில் உள்ள மக்கள் தொகையில் 3 % பேர் நிறகுருடால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் சாதாரண வெளிச்சத்தில் ஒரு பொருளின் நிறத்தை சரியாக காணவோ, உணரவோ முடியாது. இதனை நிறப்பார்வை குறைப்பாடு என்கிறோம்.

இதற்கு எவ்வித சிகிச்சையும் இல்லை. நிறக்குருடில் இரண்டு வகைகள் உள்ளன:முழு நேர மற்றும் பகுதி நேர நிறப்பார்வை குறைப்பாடு.

முதல் வகையில் கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களை மட்டுமே காண முடியும். ஆனால் இந்தவகை மிகவும் அரிதான ஒன்று.

இரண்டாவது வகையில் சிவப்பு – பச்சை மற்றும் நீலம் – மஞ்சள் நிறப்பார்வை குறைப்பாடு என இரண்டு விதம் உள்ளன.

சில குறிப்பிட்ட நிறங்களை காண முடியாமல் இருக்கும் ஆனால் அந்த நிறம் அவர்களுக்கு வெறுமையாக தெரிவதில்லை மாற்றாக வேறு வண்ணமாக அதை உணர்வர். நிறப்பார்வை குறைப்பாடு பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகளுக்கு வருவதாகவும், ஆண்களையே இது பெரும்பாலும் பாதிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நமக்கு தெரிந்த சில பிரபலங்களுக்கும் இந்த நிறகுறைபாடு உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், கேனுரீவ்ஸ், மற்றும் ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் போன்றோருக்கு இந்த நிறப்பார்வை குறைப்பாடு உள்ளது.