எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில்  செயல்படும் வெங்காய மார்க்கெட்  தற்காலிக இட மாற்றம்

மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள  வெங்காய மார்க்கெட் மற்றும் மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்று இடத்தில் செயல்படுவது குறித்து மாநகராட்சி ஆணையாளர்  குமாரவேல் பாண்டியன்  இன்று (20.4.2021)ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆர்  மார்க்கெட்டில் வெங்காய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும்,   எம்.ஜி.ஆர்  மார்க்கெட்டில் செயல்படும் வெங்காய மார்க்கெட் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

மாற்று இடத்தில் செயல்படுவதற்காக மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனிக்கு எதிரில் உள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு  மேற்கொண்டார்.

இவ்வாய்வின்  போது   கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி வளாகத்தில் உள்ள காலியிடத்தில் வெங்காய மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுவதற்கான இடமாக தேர்வு செய்தார்.

இவ்விடத்தில் வெங்காய மார்க்கெட் வியாபாரிகள் உடனடியாக மாற்றம் செய்து கூட்ட நெரிசலை தவிர்க்கும்படி மாநகராட்சி ஆணையாளர்  கேட்டுக் கொண்டார்.