கோவையில்  அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!

கொரோனா பரவல் காரணமாக கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இன்று (20.4.2021)முதல் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோவையில் தொற்றால் தினமும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று இரவு முதல் பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவையில் வ.உ.சி பூங்கா, ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், கோவை குற்றாலம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன

கடலோர மாவட்டங்களில் கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. மலைப் பிரதேசங்களான நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு முற்றிலுமாக  தடை விதிக்கப்பட்டுள்ளது.