கேபிஆர்  கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கேபிஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் , “ஆராய்ச்சி முறைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கான கற்பித்தல்” எனும் பொருண்மையில் மூன்று நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (15,16,17.04.2021) இணையவழியில் நடைபெற்றது.

மூன்று  அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வாக “தரவுப் பகுப்பாய்விற்கான புள்ளிவிவர கருவிகள்” எனும் தலைப்பில் கற்பகம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் வேல்முருகன் சிறப்புரை வழங்கினார்.

இரண்டாம் நாள் அமர்வாக “ஆராய்ச்சியில் சமூக அறிவியலுக்கான நிலையான தொகுப்பு” எனும் தலைப்பில் சென்னை, ஆவடி, புனித பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பகல்லூரியின் மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர்  சுப்ரமணி  சிறப்புரை வழங்கினார்.

மூன்றாம் நாள் அமர்வாக “ஸ்கோபஸ், கூகுள்ஸ் காலர் உள்ளிட்ட வலைதளத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியீடு செய்தல்” தொடர்பாக பெங்களூர், கிருஸ்த்து நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர் சுப்புராஜ் அழகர்சாமி  சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சேகர்  ஒருங்கிணைத்து வழங்கினார். வணிகவியல் துறை முதன்மையர் குமுதாதேவி வரவேற்புரை வழங்கினார். இப்பயிற்சி நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.