கோவையில் சாக்கர்  கால்பந்து பயிற்சி மையம் திறப்பு

கோவை கொடிசியா பகுதியில் அமைந்துள்ள ராக்ஸ் பள்ளியுடன் இணைந்து, விஜயன் சாக்கர் ஸ்கூல் ஹை பெர்பாமன்ஸ், கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கம் வகையில் “சாக்கர்” பயிற்சி மையம் இன்று (17.4.2021)திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் ஆர்.வி.எஸ்.எஸ் உரிமையாளர் மற்றும் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் கலந்து கொண்டார்.

இந்த சாக்கர் பயிற்சியின் மூலம் வீரர்களின் திறனை முழுமையாக வெளிக்கொணர்ந்து, விடாமுயற்சியுடைய சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே இப்பயிற்சியின் நோக்கம் என பள்ளிக்கூடத்தின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் கால்பந்து விளையாடுவதால் உடல் வலிமையையும், மன நலமும் சீராவதுடன் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான ஐ.லீக்ஸ் ஐ.எஸ்.எல் மற்றும் தேசிய அளவிலான பிரிவுகளுடன்  விளையாட சிறந்த வளர்ச்சி மையமாக இப்பயிற்சி மையம் இருக்கும் என தெரிவித்தனர்.