காந்தி பூங்கா தற்காலிகமாக மூடல்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் காந்தி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்காவில் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் காலை, மாலை நேரங்களில் ஓய்வெடுக்கும் பிரதான பகுதியாக உள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின்போது மூடப்பட்ட இப்பூங்கா சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்படி காந்தி பூங்கா நேற்று மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாது எனவும் மாநகராட்சி சார்பில் பூங்கா வெளியில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.