அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மருத்துவர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், அங்கு பணி புரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு முறையான உணவு இல்லை, மருந்துகள் இல்லை, தங்குவதற்கான இடவசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தருவதில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி 50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் அரசு மருத்துவமனையின் டீன் அலுவலகம் முன்பு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.