ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் “விஞ்ஞான்-2021” அறிவியல் கண்காட்சி

கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையின் சார்பாக (29.3.2021) திங்கட்கிழமையன்று விஞ்ஞான்-2021 என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனையொட்டி அறிவியல் மற்றும் பிறதுறை மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கென்று பிரத்யேகேமான “நியூடோனியன் நேஷன்” என்ற யுடியூப் சேனல் தொடங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் இந்நிகழ்விற்கு தலைமையேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இக்னேட்டா ஹாலோகிராபிக் நிறுவனத்தின் இயக்குநர் வி.வடிவேலன் இந்தக் கண்காட்சியினைத் தொடங்கிவைத்துப் பார்வையிட்டதோடு, யுடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார்.

மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும், மாணவர்கள் உருவாக்கிய இயற்பியல் அனிமேசன் காட்சிகளும் கண்காட்சியி்ல் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்கள் கவனத்தைக்கவரும் வண்ணம் இருந்தது. இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களில் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.