டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு மையம் துவக்கம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான அனைத்து நோய்களுக்கான தனி சிகிச்சை பிரிவு இன்று (14.3.2021) துவங்கப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் மூட்டு மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சைகள் உட்பட அனைத்து நோய் தொடர்பான சிகிச்சைகளுக்கும் சிறப்பு மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது, டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை. இந்நிலையில் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முத்து சரவணக்குமார் தலைமையில், இன்று முத்தூஸ் மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இதனை முத்துஸ் மருத்துவமனையின் கூட்டு நிர்வாக இயக்குநர் செல்வகுமார், மேலாண் இயக்குனர் டாக்டர் பிரேமா மற்றும் பெண்கள் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வாணி அய்யாசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

இது குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முத்து சரவணக்குமார் கூறுகையில், தற்போதையை சூழலில் பெண்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் தங்களது நோய் தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் முழுவதும் பெண்களை கொண்டே செய்யப்படுவதால், பெண்களிடையே இந்த சிகிச்சை மையம் நல்ல வரவேற்பை பெறும் என தெரிவித்தார். விழாவில் மகளிர் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் சசிஸ்ரீ, சரண்யா விஷ்ணுமதி, அதுல்யா ராஜ் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.