கோவை வந்த முதலமைச்சருக்கு அதிமுக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு

கோவை: சென்னையிலிருந்து கோவை வந்த முதலமைச்சருக்கு அதிமுக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை வந்தார். வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு பின்னர் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் சேலம் புறப்பட்டுச்சென்றார். முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ,.க்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அதிமுகவின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர்ஜெயராம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.