ஏழை மாணவர்களுக்கு  அட்டிடுயுட் அறக்கட்டளை உதவிக்கரம்

மிலக்ரான் நிறுவனத்தின் ஆதரவோடு 37 மாணவர்களுக்கு அட்டிடுயுட் அறக்கட்டளை   காசோலைகளை அண்மையில் வழங்கியது. இந்த நிகழ்வு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள வாசு ஆர்க்கெட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம்,செயலாளர் பாலு, ப்ராஜெக்ட் கோ ஆர்டினேட்டர் சண்முகா மற்றும் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் அந்தோனி ஜான்சன் ஆகியோர் காசோலையினை மாணவர்களுக்கு வழங்கினர்.

2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அட்டிடுயுட் அறக்கட்டளை ,   ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும்,    அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்பதற்காகவும்   செயல்பட்டு வருகிறது.   தொடக்கத்தில் அருகில் உள்ள கல்வி உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டும் உதவி வந்தனர்.  ஆரம்பத்தில் 4 மாணவர்கள் எனத் தொடங்கி தற்போது வரை 2000 மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளை உதவி புரிந்திருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ‘விருக்ஷா’ என்ற நிகழ்வின் மூலம் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து திறமையான செயல்பாடுகளுக்கு விருது வழங்குகின்றனர்.

ஆர்க் பவுண்டேசன் இந்தியா உடன் இணைந்து நான்கு அரசு மாநகராட்சி பள்ளிகளில் டாக்டர் கலாம் என்ற நூலகத்தை ஏற்படுத்தி தந்துள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளான புத்தகம், உடை, ஸ்டேஷனரி பொருட்கள், விளையாட்டு உபகரணம் மற்றும் வகுப்பறைக்கு தேவையான இதர பொருட்களை வாங்கி தந்து உதவி புரிந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் முகாம்களை நடத்தியுள்ளனர். நிர்மலிக்கரான என்ற திட்டத்தின் மூலம் தொம்மனாம்பாளையம்  பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 100 பெண் குழந்தைகளுக்கு கணினி அறையை உருவாக்கி தந்துள்ளனர்.