ஆதி மாருதி ஷோரூமில் ‘தி ஆல் நியூ ஸ்விப்ட்’ கார் அறிமுகம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் ‘தி ஆல் நியூ ஸ்விப்ட்’ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்டேட் பேங்க் அப் இந்தியாவின் ரிஜினல் மேனேஜர் (கோவை வடக்கு) பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பின்னர், மாருதி சுசூக்கி இந்தியா லிமிடெடின் டெரிட்டரி சேல்ஸ் மேனேஜர் மதிஅரசன், கோவை ஏரியா மேனேஜர் அஷ்வீந்திரரத்னாகரண், ஆதி மாருதியின் மேனேஜிங் டைரக்டர் சீனிவாசன், சிறப்பு விருந்தினர், ஆதி மாருதியின் ஜெனரல் மேனேஜர்கள் ராமு மற்றும் பத்மநாபன் ஆகியோர்  ‘தி ஆல் நியூ ஸ்விப்ட்’ காரினை அறிமுகப்படுத்தினார்கள்.