இந்துஸ்தான் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கோவை அவினாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் (5.3.2021) வெள்ளிக்கிழமை இன்று 18வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் 2017ம் ஆண்டுகளில் இளங்கலைப் பாடப்பிரிவுகள் பயின்ற 11 துறைகளைச் சார்ந்த 980 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 16 மாணவ மாணவிகள் பாரதியார் பல்கலைகழக அளவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக  பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் காளிராஜ்  அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், செயலர் பிரியா சதிஷ்பிரபு, முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி, அனைத்து துறைப்பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.