ஏழாவது இடத்தில் கோவை !

வாழ்வதற்கு எளிய நகரம் என்ற பட்டியலில் கோவையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

கோவை: இந்தியாவில் வாழ்வதற்கு எளிமையான நகரம் என்ற பட்டியலில் கோவை ஏழு ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் வாழ்க்கைத்தரம், மக்களின் வாழ்வியல் முறை உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ‘ஈஸ் ஆஃப் இன்டெக்ஸ்’ சார்பில் எளிமையான வாழ்க்கையை வாழ ஏற்ற நகரங்கள் என்ற தரவரிசை நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2020ம் ஆண்டில் வாழ்வதற்கு எளிய நகரங்கள் என்ற பட்டியலில் கோவை மாநகராட்சிக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.

இந்த தர வரிசை பட்டியலில் கோவை மாநகராட்சி 59.75 மதிப்பெண்களை பெற்றுள்ளது. சென்னைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெங்களூரு, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய மாநகராட்சிகள் பெற்றுள்ளன.