இந்துஸ்தான் கல்லூரியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறையும், நூலகமும் இணைந்து 3 நாட்கள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமையன்று(3.3.2021) தொடக்கவிழா கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியினை இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி கருணாகரன் தலைமையில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.

மக்கள் தொடர்பியல் அதிகாரி சங்கர் முன்னிலை வகித்த இந்நிகழ்வில் மொழித் துறையின் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் மொழித்துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் பிற துறைத் தலைவர்களும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரியின் நிறுவனர் கண்ணையன், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், செயலர் பிரியா சதீஷ்பிரபு ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.