உயிரை குடிக்கும் காதல்: அதிர்ச்சி கொடுக்கும் அப்டேட்

தீவிரவாதத்தால் இறந்தவர்களை விட, காதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் 2001ம் வருடத்தில் இருந்து 2015 வரை, காதல் காரணமாக, 38,585 கொலைகள், 79189 தற்கொலைகள் நடந்துள்ளன. 2.6 லட்சம் கடத்தல்களும் நடந்துள்ளன. அதே நேரம் தீவிரவாதத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, இருபதாயிரம். தீவிரவாதத்தால் உயிரிழப்பவர்களை விட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

காதல் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. காதல் தற்கொலைகளில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 15 ஆயிரம் தற்கொலைகள் நடந்துள்ளன. அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. இங்கு 9405 காதல் தற்கொலைகள் நடந்துள்ளதாம்.இதற்கெல்லாம் ஜாதி கட்டுப்பாடுகள்தான் காரணம் என்கிறது அந்தப் புள்ளி விவரம்.