கராத்தே கற்பதால் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல்  மையத்தை சேர்ந்த   பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கருப்பு பட்டையம் வழங்கும் விழா மற்றும் தற்காப்பு கலைகளை மாணவிகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்னவேடம்பட்டியில்  இன்று (1.03.2021) நடைபெற்றது.

கராத்தே பயிற்சியை நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு கருப்பு பட்டையம் வழங்கி தேசிய இயக்குனர் தியாகு கவுரவித்தார்.  கிருஷ்ண நந்தன்,பிரபாகரன்,பிரியங்கா,கமலேஷ் குமார்,நேத்ரா,சரவணன்,அபிஷேக்,மனோஜ் குமார்,கோகன்,ஆகியோருக்கு கருப்பு பட்டையம் வழங்கப்பட்டது.

இதில்  பிளேக் பெல்ட் வாங்கிய மாணவிகள் பேசுகையில்,சிறு வயது முதல் கராத்தே கற்று வருவதாகவும், இதன் மூலம்  தன்னம்பிக்கை வளர்வதோடு கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து , பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும்  நிலையில், தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும், நெருக்கடியான சமயத்தில் அதன் பயன் மற்றும் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது .