கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் முறை குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலைக் கல்லூரியில்  கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் முறை குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை அன்று (20.2.2021) இணையவழியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கண் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஜெ.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து இமைகளில் உராய்வைத் தடுக்கிறது. மேலும், போதிய நீர் இல்லாததால் உண்டாவதுதான் கண்களின் வறட்சிக்குக் காரணம், உடனடியாக கண்களை மருத்துவரிடம் காண்பிக்காவிட்டால் எளிதில் தொற்றுக்களை உண்டாக்கும். அதனால், கண்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதை எடுத்துரைத்தார்.

கல்வி பயிலக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து புத்தகம் படிக்கும்போது தொலைக்காட்சி பார்க்கும் போதும் கண்களை இமைக்க மறப்பதனால் போதுமான திரவம் கண்களில் சுரப்பது நின்று போகும் இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.  தொடர்ந்து கண் வறட்சியிலிருந்து விடுபட ஒமேகா – 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்  எனக் கூறினார்.