பிரதமரை கோவைக்கு வரவேற்கும் வானதி சீனிவாசனின் பாடல் !

வருகின்ற 25-ஆம் தேதி பாரத பிரதமர் மோடி கோவை வரும் நிலையில் பா.ஜ.க கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையின் கீழான குழு பிரதமரை வரவேற்கும் சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

‘வாங்க மோடி.. வணக்கம்ங்க மோடி’ என்ற அந்த பாடல்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் பாடகர்களுடன் சேர்ந்து வானதி சீனிவாசனும் பாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பாடல் சுமார் 1 நிமிடம் 18 வினாடிகள் கால அளவு கொண்டதாகவும், மோடி அவர்களை வரவேற்பதும், அவர் வழங்கிய திட்டங்களை பற்றி கூறுவதுமாய் அமைந்துள்ளது.

தனி விமானம் மூலமாக 25-ஆம் தேதி கோவை வந்தடைந்து, கொடீசியா வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அரசு விழாவிலும் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சரும் அவருடன் விழாவில் கலந்துகொள்கின்றனர்.