ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம்

கோவை: ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு 22.02.2021 அன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மாணவர்களுக்கு நம் தாய்மொழியான தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேச்சு மற்றும் பாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் சுப்பிரமணி அவர்கள் வாழ்த்துக்களைக் கூறி பாராட்டினார். மேலும், இவ்விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் தனலட்சுமி அவர்கள் மலர்வதி எழுதிய “தூப்புக்காரி” என்ற நாவலுக்கு நூல் மதிப்புரை வழங்கினார். கல்லூரியின் மொழிப்புலத்தலைவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.