“வலிமை அப்டேட்”  வந்துடுச்சு!

கோவை: போனி கபூர் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும்நிலையில் இந்த படத்தின் அப்டேட் எதுவும் வரவில்லை. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியவற்றைத் தாண்டி இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

தற்போது முதன்முறையாக ‘வலிமை’ படம் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். அதில் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படவுள்ளது எனவும், அதற்குப் பிறகு வெளிநாட்டில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் போனி கபூர். படத்தின் வெளியீடு குறித்து இன்னும் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளார். போனி கபூரின் இந்தப் பேட்டியால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.