வேளாண் கருவிகளை வணிகமயமாக்க கொடிசியா உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கொடிசியா அமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி 9.2.2021 அன்று கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் அக்ரி இன்டெக்ஸ் 2021 நிகழ்ச்சியின் தலைவர் கிருஷ்ணராஜ் அவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் நீ.குமார் தலைமையுரையில், பல்கலைக்கழகமும் கொடிசியா அமைப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினார். கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் தங்கள் துறையில் வடிவமைக்கப்பட்ட வேளாண் கருவிகள் குறித்து எடுத்துரைத்தார்கள். மேலும், பல்வேறு கருவிகளின் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. கொடிசியா அமைப்பினர் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.