மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களைக் குவித்த மேற்கு மண்டல போலீசார்

கோவை: போலீசாருக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரத்தில் கடந்த 24ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள மேற்கு மண்டல காவல்துறையில் பணியாற்றும் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 8 மண்டல போலீசாருக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மேற்கு மண்டல போலீசார் 2 தங்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று வந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார். இந்த போட்டியில், கோவை ஆயுதப்படை காவலர் பிரகாஷ்,  நீலகிரி காவல் உதவி ஆய்வாளர் மணி ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.