கோவை மாநகர காவல்துறைக்கு அதிநவீன ட்ரோன் கேமரா !

கோவையில் ஊர்வலங்கள், திருவிழாக்கள், பண்டிகைக்கால கூட்ட நெரிசல்கள், தேரோட்டங்கள்,  பொதுக்கூட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், இரவு நேரங்களிலும் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன ட்ரோன் கேமரா பி.எஸ்.ஜி மற்றும் ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் கேமராவை பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் நிறுவனர் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் காவல் ஆணையர் சுமித் சரணிடம் வழங்கினர். இந்த ட்ரோன் கேமரா 4 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று படம் பிடிக்கும் திறன் கொண்டது என்றும் இரவு நேரங்களில் கண்காணிக்கும் (நைட்விஷன் ) பொறுத்த பட்டுள்ளதாகவும் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.